செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: யுவன் சங்கர் ராஜா

மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்!

மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது. 2015ல் ஆடை வடிவமைப்பாளர் ஷஃப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஸியா என்ற மகள் உள்ளார். 2014ல் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்த யுவன், தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனித பயணத்தை யுவன் மேற்கொண்டு உள்ளார். யுவன் உம்ராவுக்கான ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர...
அனந்தம் பட டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

அனந்தம் பட டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரிகளில் ஒருவரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா.வி இயக்கியுள்ள தொடர் “அனந்தம்”. இது 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான தருணங்களை தொகுத்துள்ள இணைய தொடர். இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் இந்த தொடரை தயாரித்துள்ளார். இதன் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் மற்றும் ரீமா ரவிச்சந்தர் எழுதியுள்ளனர். பகத் ஒளிப்பதிவு பணியாற்றி ஏ.எஸ்.ராம்  இசையமைத்து சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். இந...
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.  ...
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா!

கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா! ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
யுவனின் பிறந்தநாள் பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ் – வைரலாகும் வீடியோ!

யுவனின் பிறந்தநாள் பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ் – வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
யுவனின் பிறந்தநாள் பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ் - வைரலாகும் வீடியோ! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் பாடல் பாடி அசத்தினர். நடிகர் தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்ப...
யுவன் இசையில் பாடிய சிம்பு!

யுவன் இசையில் பாடிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
யுவன் இசையில் பாடிய சிம்பு! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். இவர் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடி உள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். பிரபல நடன இயக்குனர் சாண்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த ஆல்பம் பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா! பேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் நேற்று, குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர் ராஜா, இந்தப் பதிவின் வாயிலாக மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகர் போட்ட கமெண்டில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா, வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார். மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் க...