ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: ராஜபக்சே

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு இலங்கையின் அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபச்சே கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து, 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பிரதமராக பதவி ஏற்ற பின் அவர் இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ராஜபக்சேவுக்கு நேற்று காலை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, பரஸ்பர வர்த்தம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நிருப...
இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார். சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையி...
தோல்வியால் ஆத்திரம்… பார்லிமெண்ட்டில் வன்முறையை கட்டவிழ்த்த ராஜபக்சே ஆதரவாளர்கள்!

தோல்வியால் ஆத்திரம்… பார்லிமெண்ட்டில் வன்முறையை கட்டவிழ்த்த ராஜபக்சே ஆதரவாளர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியதும் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், அதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இழந்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது.  அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அப...