புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வருகின்றனர். ஒமைக்ரான், கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ந்தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மார்ச் மாதத்து...
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!

சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு! இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலைவரிசை மிகப்பெரிய அளவில் பரவி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது....