22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!
22ம் தேதி முழு ஊரடங்கு... மெட்ரோ ரயில் ஓடாது... பால் இல்லை... கோயம்பேடு மார்க்கெட் லீவு... கொரானா பரவலை தடுக்க..!
உலகம் முழுதும் பெரும் பீதியையும், அச்சத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
பெறுபாலான நாடுகள் பிற நாடுகளுடனான போக்குவரத்தை தடை செய்து விட்டது. வான் வழி போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சாலை மார்க்கமான வழிகள் என எல்லாம் அடைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.
சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் என்னதான் பாதுகாப்பு முறையை கடை...
