திங்கட்கிழமை, மே 4
Shadow

22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!

 

 

22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!

உலகம் முழுதும் பெரும் பீதியையும், அச்சத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

பெறுபாலான நாடுகள் பிற நாடுகளுடனான போக்குவரத்தை தடை செய்து விட்டது. வான் வழி போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சாலை மார்க்கமான வழிகள் என எல்லாம் அடைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.

சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் என்னதான் பாதுகாப்பு முறையை கடைபிடித்தாலும் மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். அதோடு 22-ம் தேதி காலை முதல் மாலை வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களும் மக்கள் ஊரடங்கு சரிதான் என ஆமோதித்து உள்ளனர்.

இதையடுத்து, வரும் 22-ம் தேதி மக்களுக்கு தேவையான காய்கறிகளை சப்ளை செய்யும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.

அன்று காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப் போவதில்லை என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் சென்னையில் வரும் 22-ம் தேதி மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கண்ணுக்கு தெரிந்த எதிரியாக இருந்தால் பலத்தை வைத்து வெற்றி பெறலாம்… இது கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி அதிலும் பரவும் தன்மை உடையது என்பதால் அரசாங்கம் சொல்லும் நடைமுறைகளை ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

1,347 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன