ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் சுப்ரீம கே...