ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.
இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா.
தற்போது ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கடந்த ...




