ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே தலிபான்களிடம் நிம்ரோஸ் மாகாண தலைநகரம் சாரஞ்ச் வீழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றினார்கள்.
2 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது.
தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. நகருக்குள் பதுங்கி இருக்கும் ...
