ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Agilesh yathav

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு – அகிலேஷ் யாதவ்

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு – அகிலேஷ் யாதவ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வகுப்புவாதத்தை தூண்ட துவங்கி உள்ளது. பா.ஜ.க வெற்றிபெற நாங்கள் விரும்பவில்லை. எனவே சமஜ்வாடி கட்சி சார்பில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தவர்களாக உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்....
ரவுடி விகாஸ் துபே காரை கவிழ்த்து என்கவுண்டர் செய்து தன் ரகசியத்தை உ.பி.அரசு காப்பாற்றிக் கொண்டது – அகிலேஷ் யாதவ் கருத்து

ரவுடி விகாஸ் துபே காரை கவிழ்த்து என்கவுண்டர் செய்து தன் ரகசியத்தை உ.பி.அரசு காப்பாற்றிக் கொண்டது – அகிலேஷ் யாதவ் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி.அரசு ரகசியத்தை காப்பாற்றிக் கொள்ள ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் கொலை - அகிலேஷ் யாதவ் கருத்து உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.  இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு காரணமான ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யும் பணியில் உத்தர பிரதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அம்மாநில போலீஸ் பிடியில் விகாஸ் துபே சிக்கினான். இதையடுத்து, உத்தர...