
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வகுப்புவாதத்தை தூண்ட துவங்கி உள்ளது. பா.ஜ.க வெற்றிபெற நாங்கள் விரும்பவில்லை. எனவே சமஜ்வாடி கட்சி சார்பில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தவர்களாக உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்.
