தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!
தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் உள்ள மும்மொழிக்கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டன.
அதேநேரம், தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும் என கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவ...
