அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!
வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய
அத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார்.
அப்புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும்,
அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, தான் கடந்த 25 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று கண்டதாகவும்,
அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் கா...

