சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்… மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்!

 

இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்… மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்  நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’

இது பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல், இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களுக்கு 50 சத்வீத இருக்கை கட்டுப்பாடுகள் காரணமாக பட வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்தது.

பல ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்கள் ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ரிலீஸ் தள்ளிப்போன தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

இந்த சூழலில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு  விலக்கிக் கொள்ளப்பட்டால் வரும்  மார்ச் மாத இறுதியில் வலிமை திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வலிமை படமே இன்னமும் ரிலீஸ் ஆகாத சூழலில்,  அஜித் தனது அடுத்தப் படத்திலும் போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறாராம்.  இப்படத்திற்கும் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  நடிகர் அஜித் போனி கபூரை நேற்று முன்தினம் மும்பை சென்று சந்தித்த புகைப்படம் வெளியாகி இந்த தகவலை உறுதி படுத்துகிறது.

இச்சந்திப்பின்போது வலிமை திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகவும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தும் அஜித், போனிகபூரிடம் பேசியதாக கூறப்படுறது. இவர்களின் சந்திப்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

637 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன