ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய அஜீத்தின் வலிமை!
வலிமை திரைப்படம் குறித்து ஒரு சின்ன அப்டேட் கிடைக்காதா? என்று பல மாதங்களாக ஏங்கித் தவித்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு சமீப நாட்களாக போதும் போதும் என்கிற அளவிலான ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.
முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள தேதி தான் - பிப்ரவரி 24.
அப்படியாக இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் முன்பதிவுகள் படுவேகமாக நடந்து வரும் நிலைப்பாட்டில் வலிமை திரைப்பட ரிலீஸ் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
அது வலிமை திரைப்படமானது மொத்தம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் ஆகும்.
போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது வலிமை திரைப்படம் ...


