மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!
அஜித்தின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வலிமை’.
அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார்.
இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலிமை அப்டேட் என்ற வார்த்தை கூட டிரண்டிங்கில் இருந்தது. இந்த சூழலில் வலிமை டீசர் வெளியாகி பெரும் வர்வேற்ப்பை பெற்றது.
யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் பொங்கல் ரிலீசாக வலிமை வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
அதோடு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆவதால் இன்னும் சந்தோஷத்தில் அஜீத் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இந்தி டிரெய்லரையும் படக்குழு வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



