செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய அஜீத்தின் வலிமை!

 

 

வலிமை திரைப்படம் குறித்து ஒரு சின்ன அப்டேட் கிடைக்காதா? என்று பல மாதங்களாக ஏங்கித் தவித்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு சமீப நாட்களாக போதும் போதும் என்கிற அளவிலான ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.

முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள தேதி தான் – பிப்ரவரி 24.

அப்படியாக இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் முன்பதிவுகள் படுவேகமாக நடந்து வரும் நிலைப்பாட்டில் வலிமை திரைப்பட ரிலீஸ் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

அது வலிமை திரைப்படமானது மொத்தம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் ஆகும்.

போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது வலிமை திரைப்படம் நிச்சயம் “தாறுமாறான ஒரு வசூல் சாதனை”யை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் “வெளியான டிரெய்லர், ப்ரோமோ வீடியோ என அனைத்திலுமே அதே ‘பஸ் சேசிங்’சீன் தான் அதிகம் காட்டப்படுகிறது.

அந்த ஒரு சீனை தவிர்த்து படத்தில் வேறு சீனே இல்லையா!” என்று சிலர் கேலி செய்த வண்ணமும் உள்ளனர்.

அதற்கு “படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பதில் சொல்றோம்” என்கிற பதில்களும் கிளம்பி உள்ளது.

இப்படி, ரசிகர்களுக்கு இடையேயான வழக்கமான கருத்து மோதல்களுக்கு மத்தியில் வலிமை திரைப்படம் ஆனது பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. வெளியான ஒரு லேட்டஸ்ட் தகவலின்படி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 4000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

4,000 திரையரங்குகள் என்கிற எண்ணிக்கையை இதுவரை எந்தவொரு அஜித் குமார் திரைப்படமும் சந்தித்தது இல்லை என்பதால்,

மொத்தம் 4,000 திரையரங்குகளில் வெளியாகும் அஜித் குமாரின் முதல் திரைப்படம் ‘வலிமை’ தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக ரிலீஸ் ஆகும் முன்பே ஒரு ரெக்கார்ட்-ஐ படைத்துள்ளது வலிமை திரைப்படம்.

394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன