ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1
Shadow

Tag: Andrea

நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா! தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்....
போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா !

போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
*போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா* பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்...
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல – ஆண்ட்ரியா

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல – ஆண்ட்ரியா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப்பான மீடூ இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன். தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல. வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்...