ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: Atharva

சற்குணம் இயக்க அதர்வா நடிக்கும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்!

சற்குணம் இயக்க அதர்வா நடிக்கும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!* பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்‌ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறத...
படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா!

படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜனவரி 2-ந்தேதி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் பு...
ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை சமீபத்தில் தோனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்க...
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா! 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அப...
‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது! ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்’. அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குருதி ஆட்டம் படத்தில் இடம்பெறும் ‘ரங்க ராட்டினம்’ எனும் பாடலை வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா! “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது!

மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது! தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் சரவன், அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் 2 படத்திற்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லி பாபுவிடம் கூறியுள்ளதாகவும், அதற்கான கதையில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம்  'மரகத நாணயம் 2' விரைவில் உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என ...
‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன். ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக...