தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த், தொடர்ந்து துருவங்கள் பதினாரு, பாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளான யாஷிகா தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், இவரது நெருங்கிய நண்பரான பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ல் கலந்துகொண்டு இறுதிசசுற்றில் 2-வது இடம் பிடித்தார்.
தொடர்ந்து சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில், யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் நந்தகுமார் கலந்து கொண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
ஆறடி உயரம், நீண்ட தலைமுடி என பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான லுக்கில் கவனம் ஈர்த்த நிரூப், தான் ...