புதன்கிழமை, மே 15
Shadow

Tag: Chennai Rain

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது. வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், வி...
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு! சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல், மிக கனமழை பெய்யும். நாளை 1-ந் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற...
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்!

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்! தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத...
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர்  4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சென்னையில் இருநது 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது. சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும், நாளையும் வடதமிழகத்தில் மிக மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்,  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் க...