வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

flood news

வரலாறு காணாத மழை ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு

வரலாறு காணாத மழை ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
  தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது. அதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ள சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீபாலகிருஷ்ணா டாக்கீஸ் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்னை வாழ வைக்கும் தூத்துக்குடி மக்களே இன்று இந்த புயல் சின்னத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என...
பிரசித்திப் பெற்ற “புதுச்சேரி காமாட்சி ” உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்!

பிரசித்திப் பெற்ற “புதுச்சேரி காமாட்சி ” உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
  திரைபிரபலங்களின் மத்தியில் பிரசித்திப் பெற்ற "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம். புதுச்சேரி மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது, புதுச்சேரியில் நான்கு கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "புதுச்சேரி காமாட்சி " உணவகம் சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கப்பட்டது, தற்போது மக்களின் பேரதரவுடன் புதுப்பொலிவுடன் அசோக் பில்லரில் 75 இருக்கை வசதிகளுடன் மிகப்பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பற்றி "புதுச்சேரி காமாட்சி " உணவகம் உரிமையாளர் திரு.அக்கேஷ் ராஜ் அவர்கள் கூறிய பொது :- 60 வருடத்திற்கு முன் கடலூரில் எனது தாத்தா பாட்டி 'மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் உணவகம் தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். அதன் பின் 2003ம் ஆண்டு புதுச்சேரியில் நான்...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய ‘நால்கே’ புயல்! பேய் மழை!!

flood news, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய 'நால்கே' புயல்! பேய் மழை!! தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்...
கடும்மழை, நிலச்சரிவு வரலாறுகாணாத வெள்ளம் துண்டிக்கப்பட்ட “எந்திரன்” பட சூட்டிங் ஸ்பாட்!

கடும்மழை, நிலச்சரிவு வரலாறுகாணாத வெள்ளம் துண்டிக்கப்பட்ட “எந்திரன்” பட சூட்டிங் ஸ்பாட்!

flood news, HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, மலைப்பகுதிகள் மற்றும் மழைக்காடுகளை அதிக அளவில் கொண்ட நாடாகும். அங்குள்ள ‘மச்சு பிச்சு’ என்ற 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலை நகரம் உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகெங்கிலும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெரு நாட்டிற்கு வருகை தருகின்றனர்.   தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் முதல் முறையாக இந்த மச்சு பிச்சு மலைகள் இடம்பெற்றன. அந்த படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மலைப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட பெருமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மச்சு பிச்சு செல்லும் பாதை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன. இ...
49 அடி சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்காவில் மீட்புப் பணிகள் தீவிரம்!

49 அடி சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்காவில் மீட்புப் பணிகள் தீவிரம்!

flood news, HOME SLIDER, உலக செய்திகள்
  டோங்காவில் கடந்த வார இறுதியில் 49 அடி சுனாமி அலை தாக்கியதாக அந்நாட்டு அரசு  தெரிவித்தது. பசிபிக் தீவு நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது. டோங்காவின் மேற்குக் கடற்கரையில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாபெரும் சுனாமியால் குறைந்தபட்சம் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஒரு கிராமமே முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, எரிமலை வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தீவு டோங்காவுடனான தகவல் தொடர்புத் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் தாமதமாகின. தற்போது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்...
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது. வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், வி...
கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!

flood news, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!   சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்கா நாட்டில் பல தீவுகள் உள்ளன. இவற்றில் ஒரு சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன. டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது. இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகின. நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ...
மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

flood news, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த மழையால் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை மழை நீர் தேங்கி இருக்கும். ஆனால், இந்த முறை தேங்கி இருந்த மழை நீர், மழை விட்டதும் வடிந்துவிட்டது. மெட்ரோ பணி நடைபெறும் இடங்களிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கி இருக்கும் நீரை மோட்டார் மூலம் எடுத்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக, 560 பம்ப் செட் மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். ...
தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

flood news, HOME SLIDER, செய்திகள்
  தொடரும் கனமழை - கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும...