சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!

 

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!

 

சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்கா நாட்டில் பல தீவுகள் உள்ளன.
இவற்றில் ஒரு சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன.
டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது.
இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகின. நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன.
சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
791 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன