சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு!

நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு!

ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள்.

ஆனால் டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராஃப் போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக பிம்மிஹால் என்பவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்போனது வேறு டாக்டர்.  அப்போது அந்த கல்லீரலில் ஒரு இனிசியல் இருப்பதை பார்த்து அந்த டாக்டர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

உடனடியாக அதனை போட்டோ எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதற்கு முன் ஆபரேஷன் செய்த டாக்டரை அழைத்து விசாரித்தது. அப்போது அந்த நோயாளிக்கு ஏற்கனவே கல்லீரலில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தான் ஆட்டோகிராப இனிஷியலை பதிவு செய்தது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்த போது அவர் சொன்ன பதில்தான் அதிர்ர்சி ரகம்…”நீண்ட நேரம் ஆபரேஷன் நடந்ததால் தனது மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள இவ்வாறு இனிஷியலை பதிவு செய்ததாக” டாக்டர் சொல்ல…

இதனை அடுத்து அவர் மீது விசாரணை நடத்த மருத்துவ தீர்ப்பாயம் அவரை 5 மாதம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. மேலும் 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தண்டனை அவருக்கு போதாது என்று கூறி மேல் முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டில் அவரது மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் ஒருவர் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்தபோது ஆட்டோகிராப் போட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

303 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன