ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 28
Shadow

Tag: Civic polls

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு! தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர். 35 ஊராட்சி ஒன்றியங்களு...
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும்,  அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.த...