சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Cong

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது! பாஜக திரைமறைவு வேலையா?

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது! பாஜக திரைமறைவு வேலையா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்வராக உள்ள கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது ஆட்சி பறிபோகும் நிலைக்கு காரணமாகி உள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறி, பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு வந்தார்கள். இதனால் ம.பி. அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடி...
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. ...