புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: crocodiles farm in india

சென்னையிலிருந்து குஜராத்துக்கு இடம் மாறும் 1000 முதலைகள்… காரணம் இதுதானாம்!

சென்னையிலிருந்து குஜராத்துக்கு இடம் மாறும் 1000 முதலைகள்… காரணம் இதுதானாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள முதலைப் பண்ணையில், 17 வகைகளை சேர்ந்த சுமார் 2,000 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆசியா கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக இந்த முதலைப்பண்ணை திகழ்ந்து வருகிறது. இங்கே பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில முதலைகள் ஆகும். இத்தகைய பெருமை வாய்ந்த முதலைப்பண்ணையில், நாள் ஒன்றுக்கு கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி என சுமார் 500 கிலோ இறைச்சி வரை முதலைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் முதலைப் பண்ணை தவித்துவருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பார்வையாளர்கள் வரத்து குறைந்ததால் முதலை பண்ணைக்கு வருவாய் குறைந்தது. இதனால் முதலைகளை பராமரிக்க முடியவில்லை என்பதாலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில...