எதற்கும் துணிந்தவன் தெலுங்கு பேசிய சூர்யா!
எதற்கும் துணிந்தவன் தெலுங்கு வர்சனுக்கு நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசும் போட்டோவை படக்குழு பகிர்ந்துள்ளது
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்
எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இப்படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரைய...


