புதன்கிழமை, ஜூலை 29
Shadow

உதயநிதி வெளியிடும் சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”

 

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கிய பாண்டிராஜ், மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ளார்.

அவர்கள் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார்.

சூர்யா நடித்திருக்கும் இந்தப் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இதில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிப்ரவரி 4-ஆம் தேதி, இப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

778 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன