சிறையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்ட விக்கிலீக்ஸ் நிறுவனர்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.
அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார்.
ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அவ்வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர்.
எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கும் அசாஞ்சே, 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக இருந்தார்
...
