புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: gvm

‘வெந்து தணிந்தது காடு’ மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு !

‘வெந்து தணிந்தது காடு’ மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 15-ந்தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில்...
பான் இந்தியா படத்தில் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைந்த விஜய் சேதுபதி

பான் இந்தியா படத்தில் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைந்த விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER
*பான் இந்தியா படமான ‘மைக்கேலில்’ வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்* ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அ...