இன்றைய முக்கியச் செய்திகள் – kodanki head lines 29.01.22
தமிழகம் முழுவதும் 20-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது
உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டியும், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சும் விளையாட உள்ளனர்.
கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு...


