சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: #Heavy-rain #rain

கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனமழை காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் . வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றதழுத்த தாழ்வு மையம் இலங்கை வழியாக தமிழகத்தை கடக்கும்.   28ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். 29ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 30, மே-1ம் தேதி தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப...
தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ...
தமிழகத்தில் பரவலாக மழை – 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் பரவலாக மழை – 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது....