சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: hidden camera

காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், மாசி கொடை விழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிவறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 17-ந்தேதி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்தபோது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திக...