வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ilayaraja hits

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    நீண்ட காலத்திற்குப் பிறகு இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் அவரது குடும்பத்தார் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள்.. மூத்தவர் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட். ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம்தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன்.. பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர். அடுத்து இளையராஜா, கடைசியாக கங்கை அமரன். கடைசி மூவரும்தான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். பாவலர் சகோதரர்கள் என்பது அவர்களின் பெயர். நால்வரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள். பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தி...
விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  விரைவில் விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை! இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம் பெறும் என தெரிகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்ட...