ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

 

 

நீண்ட காலத்திற்குப் பிறகு இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் அவரது குடும்பத்தார் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள்.. மூத்தவர் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட். ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர்.

அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம்தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன்.. பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர். அடுத்து இளையராஜா, கடைசியாக கங்கை அமரன்.

கடைசி மூவரும்தான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். பாவலர் சகோதரர்கள் என்பது அவர்களின் பெயர். நால்வரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள்.

பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்திருந்தாலும் தன்னை படம் இயக்கவோ, இசையமைக்கவோ இளையராஜா அனுமதித்ததில்லை என பேட்டியில் கங்கை அமரன் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். இது போல் பல விஷயங்கள்.

இதனால் அண்ணன், தம்பிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமலிருப்பதுண்டு.

அப்படி பல வருட பிரிவுக்குப் பிறகு நேற்று இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டனர். அது இருவீட்டாருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு, பாவலர் பிரதர்ஸ் ரீயூனியன் என்று  தெரிவித்துள்ளார்.

கங்கை அமரனின் இரண்டாவது மகன் பிரேம்ஜி அதே புகைப்படத்தை பகிர்ந்து, இன்று நடந்த சந்திப்பு… இறை அருளுக்கு நன்றி… உறவுகள் தொடர்கதை என்று பதிவிட்டுள்ளார்.

 

694 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன