ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

Tag: ilayaraja spb fight

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    நீண்ட காலத்திற்குப் பிறகு இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் அவரது குடும்பத்தார் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள்.. மூத்தவர் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட். ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம்தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன்.. பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர். அடுத்து இளையராஜா, கடைசியாக கங்கை அமரன். கடைசி மூவரும்தான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். பாவலர் சகோதரர்கள் என்பது அவர்களின் பெயர். நால்வரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள். பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தி...