ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!
ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் நாளையும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 மணி நேரத்திற்கு மேலாக இன்று நடைபெற்ற விசாரணையில் அவரிடம் சுமார் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தரப்பில் சில விளக்கங்களும் பதில்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விசாரணையில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை...
