கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்ட மரக்கன்று! கதறி அழுத தாயார்!!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நடப்பட்டது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் 17 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு
அவரது தந்தை அருகில் உள்ள நகரமான வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்க வேப்பூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.
அதற்கு வேப்பூர் காவல் நிலையத்தில் ஸ்ரீமதியின் குடும்பத்தினர் மரக்கன்று வழங்க அனுமதி கேட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனவும்,
மேலும் அந்த இடம் அதிக மக்கள் கூடும் இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்திருந்தனர்.
இதனையடுத்து ஸ்ரீமதியின் சொந்த கிராமத்திலேயே அவரது பெற்றோர்கள் மரக்கன்று வழங்குவது என முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பெரியநெசலூர் கிராமத்தில் ஸ்ரீமதி உடல் அடக்கம் ...
