வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: Kangana Ranaut

நடிகை கங்கனாவின் “அக்னிபாத்” கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

நடிகை கங்கனாவின் “அக்னிபாத்” கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதை திரும்ப பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அதேநேரம் இந்த திட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபாத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது' என குறிப்பிட்டு உள்ளார். இவரின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது....
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு!

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தேசிய அளவில் அதிரடி அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மகராஜ் யோகி ஆதித்யநாத் மகத்தான வெற்றி பெற்ற பிறகு அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது ஒரு அற்புதமான மாலை. மகாராஜ்-ன் கருணை, அக்கறை மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவை என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துவதில் இருந்து நிறுத்தவில்லை. நான் கௌரவமாகவும், ஊக்கமாகவும் உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த யோகி அரசு திட்டமிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்...
தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் மும்பை திரையுலக பிரபலங்கள் மூலம்தான் நாடு முழுவதும் அறிமுகமானது. இன்று அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்போது மீண்டும் ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார். முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார். இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்கள். இந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்....
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்!

மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்! நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன். இந்த பதிவுக்காக தீய சக்...
சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. கங்கனா ரணாவத் சொல்கிறார்!

சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. கங்கனா ரணாவத் சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா - நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்.... கங்கனா ரணாவத் சொல்கிறார்! நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில், நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரணாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார். அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத...