புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: kanimozhi MP

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!  

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!  

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து! தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை புதிய திமுக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஐஜி அந்தஸ்த்தில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழக காவல்துறையிலேயே முதன்முறையாகும். குரூப்-1 அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். தூத்துக்கு...
இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.* *-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.* இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பார...
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது - கனிமொழி ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பிலும், தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வருடமும், இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 17 ஆண்டு களுக்கு பின்னர் மத்திய தொல்லியல்துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.  திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளனர். அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வு பணியை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.  ”ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ...
உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

HOME SLIDER, NEWS, politics
உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனிடையே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்” என்று கனிமொழி பதிவிட்டுள்ளார். https://twitter.com/KanimozhiDMK/status/1388933397146263552?s=20...
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும்  போற்றி வருகின்றனர்.  திருக்குறளை உலகப் பொதுமறை என்ஃஅ போற்றி வருகின்றனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கன்யாகுமரியில் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்டமான சிலை ஒன்றை அமைத்து அவர் புகழை மேலும் பரப்பினார். திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி இன்று கன்யாகுமரி சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   இது குறித்து அவர் தனது டிவிட்டரில், “இன்று கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவரது அறிவார்ந்த கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊக்க சக்தியாக இருப்பவை. தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வள்ளுவர் சிலை சரியான பராமரிப்பில்லாமல் உள...