வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: kuthiraivaal celebrities review

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இதுவரை ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என கதை சொன்னது போரடித்து விட்டது போலும்... Non -Linear  முறையில் கதை சொல்கிறேன் என களமிறங்கியவர்களை தனது பேனர் மூலம் வெளியே காட்டியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் ”குதிரைவால்” படம் அறிவிப்பின் போதே வித்தியாசமான போஸ்டரில் ஆரம்பித்து டிரைலர் என ரிலீஸ் வரை புரியாத புதிராக இருந்தது மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதே. இந்த குதிரைவாலுக்கு விடை கிடைத்ததா? கதை நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து தீடீரென கண் விழிக்கிறார்... தன் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் காரணம் கலையரசனுக்கு குதிரையின் வால்...