வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

 

 

மிழ் சினிமாவில் இதுவரை ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என கதை சொன்னது போரடித்து விட்டது போலும்… Non -Linear  முறையில் கதை சொல்கிறேன் என களமிறங்கியவர்களை தனது பேனர் மூலம் வெளியே காட்டியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் ”குதிரைவால்”

படம் அறிவிப்பின் போதே வித்தியாசமான போஸ்டரில் ஆரம்பித்து டிரைலர் என ரிலீஸ் வரை புரியாத புதிராக இருந்தது மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதே.

இந்த குதிரைவாலுக்கு விடை கிடைத்ததா?

கதை நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து தீடீரென கண் விழிக்கிறார்… தன் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் காரணம் கலையரசனுக்கு குதிரையின் வால் முளைத்திருந்தது. இதனால் வங்கி வேலையும் பறிபோகிறது.

தனக்கு எப்படி வால் முளைத்தது என்பதை கண்டுபிடிக்க குறி சொல்லும் பாட்டி, டிவியில் பேசும் ஜோசியர், கணக்கு வாத்தியார் என சிலரைத்தேடிப் போகிறார். கடைசியில் குதிரைவால் முளைத்த காரணம் கண்டுபிடித்தாரா? பறிபோன வேலை திரும்ப கிடைத்ததா? வால் முளைத்தது கனவா? நிஜமா? என்பதை சொல்கிறது குதிரைவால் படம். இது நம்ப அறிவுக்கு எட்டிய கதை.

கலையரசன் குதிரை வாலுடன் சிரமப்பட்டே நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் இன்னமும் மெனக்கெடுதல் இருக்க வேண்டும். கதை கேட்பதிலும் இன்னும் கவனம் வைக்காமல் போனால் “முன்னாடி கலையரசன்னு ஒருத்தர் இருந்தாருப்பா”ன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க…

முதல் முறை இல்ல எத்தனை முறை பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியாத கதை…

தினக்கூலி வாங்கி வரிசையில் நின்று உழைத்த காசில் டிக்கெட் வாங்கி பார்க்கும் பாமரனுக்கு புரியாத மொழியில் உருவாக்கப்பட்டு அறிவு பெருத்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய திரைக்கதை.

பொழுது போக்குக்காக இல்லாமல் உலக அரசியலையும், உளவியல் அரசியலையும் பேசி படம் பார்க்கிறவர்களை “பின்னங்கால் பிடறியில் பட தெறிக்க விடும்” வசனங்கள்.

திடீரென எம்ஜிஆர் குரல் வருவதும்… தொப்பி கண்ணாடி கிணற்றில் மிதப்பதும், எம்ஜிஆர் இறந்து போன அறிவிப்பும் எதற்காக வருகிறது என்பதையும் இயக்குனர்தான் வெளக்க வேண்டும்… இப்படி படம் எடுத்தால் ரசிகர்கள் வெளுப்பார்கள் என்பதையும் தயாரித்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

யாருக்குமே புரியாமல் படம் எடுத்து, இயக்கியவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒரே தமிழ் படம் குதிரைவால்.

அழகிய ஓவியங்கள், மலை முகடுகள், மலைகிராம பின்னணியில் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு.

இதெல்லாம் சொல்றது சரிதான் எங்க விமர்சனம்னு யாராவது யோசிச்சா உங்களுக்கு நான் மேல எழுதியிருக்கும் விமர்சனத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லைன்னுதான் அர்த்தம்.

அப்ப ”உலக தரம் வாய்ந்த படம், தமிழ் சினிமாவில் என் கேரியரில் நான் பார்க்காத கதை இது”ன்னு இயக்குனர் மிஷ்கின் பாராட்டினாரேன்னு யோசிக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேக்குது…

அவர்(மிஷ்கின்) சரியாத்தான் சொல்லி இருக்கார்… ”யப்பா ராசாக்களா இது உள்ளூர்ல பாக்குற படமில்ல… ஒலக லெவல் படம்… இத பாத்து புரிஞ்சிக்கினனும்னா மூளை மண்டையில மட்டும் இருந்தா போதாது ஒடம்பு பூரா இருக்கனும் அப்படீன்னு” இது புரியாம…(ஹலோ மூளை மண்டைய்ல மட்டும் தான் இருக்கும் ஒடம்பு பூரா இருக்கும்னா அதுக்கு கொ… வேற பேர் இருக்குப்பா)

ஒரு வரியில் குதிரைவால் கதையை சொல்பவர்களுக்கு தங்ககாசு பரிசு அறிவிக்கும் திறன் வாய்ந்த கதை (கண்டிப்பா ஒரு பயலுக்கும் புரியாது. ஒரு பயலும் சொல்லிகிட மாட்டான். அந்தால எவ்ளோ பரிசு அறிவிச்சாலும் அது கம்பெனிக்குதாம்ல)

மொத்தத்துல அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கப் போகும் குதிரைவால்.

 

கோடங்கி மதிப்பீடு:

கதை – 0.5/5

திரைக்கதை – 0/5

நடிப்பு – 1/5

இசை – 1/5

பின்னணி இசை – 0.5/5

குழப்பம் – 10/5

 

572 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன