ரீமேக் படங்களில் நடிப்பது சவாலானது ஆனால் காற்றின் மொழி அனுபவம் இனிமையானது – ஜோதிகா
"காற்றின் மொழி" படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பிரபலங்கள் பேசியது...
கலை இயக்குநர் கதிர் பேசும்போது:-
தொடர்ந்து ராதாமோகனிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர் கூறியபோது குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கு எல்லோரும் உதவி புரிந்தார்கள்.
எழுத்தாளர் பார்த்திபன் பேசும்போது:-
‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக பேசினேன். அவருடைய படத்திற்கு இப்படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. முழுக்க முழுக்க ஜோதிகாவுடைய ஆதிக்கம் தான். நடிப்பில் ராக்ஷஸி போல நடித்திருந்தார். இவ்வாறு எழுத்தாளர் பார்த்திபன் பேசினார்.
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பேசும்போது:-
இந்த படம் நான் பணியாற்றிய படங்களிலேயே இந்த படம் தான் அமைதியாக பணியாற்றினேன். ஒவ்வொரு படம் பணியாற்றும்போதும் பயத்தோடுதான் பணியாற்றுவோம். விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். லட்சும...
