சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: mathavan

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்!

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்! தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. மேலும் அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அருண் விஜய்யிடமும் பேசி வருகிறார்களாம். இவர்கள் ...
வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்!

வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்! இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார். ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளன...