ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை!
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை!
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 2-வது இடத...
