செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: Mohanlal

ஜெயிலர் படத்தில் மோகன்லால்… படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்!

ஜெயிலர் படத்தில் மோகன்லால்… படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ...
அமலாக்கத்துறை மோகன்லாலுக்கு சம்மன் !

அமலாக்கத்துறை மோகன்லாலுக்கு சம்மன் !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்! கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். மோன்சன் புராதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வந்து சென்றனர். இவரிடம் பழங்கால புராதன பொருள் வாங்கிய ஒருவர், மோன்சன் மாவுங்கல் தன்னை மோசடி செய்து விட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் மோன்சன் மாவுங்கல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே மோன்சன் மாவுங்கல் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு வந்து சென்ற பிரபலங்கள் மற்றும் அவரிடம் பழங்கால பொருட்கள் வாங்கியவர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். அந்த வகை...
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா! 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அப...
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்! அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். இந்நிலையில், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி...
தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்!

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது ...
“ஆராட்டு” எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

“ஆராட்டு” எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
"ஆராட்டு" எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் காட்சியில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படமும் இதுதான். இந்நிலையில், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ எனும் மலையாள படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன், ஏ.ஆர்.ரகுமான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெ...
மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!

மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாளத்தில் எப்போதும் நல்ல கதைகளை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மோகன்லால் நடித்த புலிமுருகன் முதல் தடவையாக ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. அதன்பிறகு நிவின்பாலி கதாநாயகனாக நடித்த காயங்குளம் கொச்சுண்ணி படமும் ரூ.100 கோடி வசூலை தொட்டது. தற்போது பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழில் லூசிபர் படத்தை தாணு தனது நிறுவனம் சார்பில் ரிலீஸ் செய்திருந்தார். ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. “இந்த பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய உலக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் மோகன்லால...