ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1
Shadow

Tag: Namitha

கர்ப்பமான நமீதா வைரலாகும் புகைப்படம்!

கர்ப்பமான நமீதா வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார். பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார். 2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப...
ரெட் கார்டா?…. கொரோனாவா? – பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்!

ரெட் கார்டா?…. கொரோனாவா? – பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ரெட் கார்டா?.... கொரோனாவா? - பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்! பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை. கடந்த வாரம் நடந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இவ்வாறு முதல் வாரமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் த...
புதிதாக ஓடிடி தளம் தொடங்கிய நமீதா!

புதிதாக ஓடிடி தளம் தொடங்கிய நமீதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
புதிதாக ஓடிடி தளம் தொடங்கிய நமீதா! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் மக்களிடையே ஓடிடி தளங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நடிகை நமீதா, புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். ‘நமீதா தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள நமீதா, சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத...
பாஜக செயற்குழு உறுப்பினர் ஆன நமீதா!

பாஜக செயற்குழு உறுப்பினர் ஆன நமீதா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார். பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.   அதே போல காயத்ரி ரகுராம், தினமலர் பாலாஜி உட்பட பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது....
திடீரென நமீதா வெளியிட்ட கவர்ச்சி படங்கள்…

திடீரென நமீதா வெளியிட்ட கவர்ச்சி படங்கள்…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  திடீரென நமீதா வெளியிட்ட கவர்ச்சி படங்கள்... திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, தன்னுடைய டிரேட் மார்க் தொடையழகு பளிச்சிடும் படியான படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படங்கள் படத்துக்காக எடுக்கப்பட்டதா அல்லது பட வாய்ப்புக்கா என்பது தெரியவில்லை....