15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அவருடைய சினிமா பயணம் தொடங்கி 15 வருடம் ஆகியிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். இவருடன் இணைந்து பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார்.
கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவருடைய சினிமா பயணத்தில் இவருக்கு பருத்திவீரன் முக்கியமாக திரைப்படமாக அமைந்தது. பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.
அதன்பின் அவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இன்று (23-02-2022) கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கார்த்தி அவருடைய சமூக வலைத...
