காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? திரையில் விடை சொல்ல வருகிறது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம்
பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் பிரபாஸ். வீரமும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படங்களில் நடித்து அனைத்து இதயங்களையும் திருடிய பிரபாஸ், ஒரு அழகான காதல் கதையுடன் அதே இதயங்களை வருட வருகிறார்.
ராதாகிருஷ்ணாவின் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் காதல் காவியம் ராதேஷ்யாம்.
காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன.
அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக...
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை மார்ச் 2ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது....
படத்திற்காக போடப்பட்ட செட்டை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்த பிரபாஸ் படக்குழு!
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.
அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்துக்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி அந்த செட்டில் உள்ள 50 படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட் உடைகள் ஆகியவற்றை தனியார் மருத்துவமனைக்கு ...