ரகசியங்கள் கசிவது யாரால்… ரஜினி வீட்டில் ஒரு கருப்பு ஆடு…
ரகசியங்கள் கசிவது யாரால்...
ரஜினி வீட்டில் ஒரு கருப்பு ஆடு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது... அவரைப்பற்றிய எந்த செய்தியானாலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியிருக்கும்போது இப்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் என தினமும் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி ரஜினியை மெர்சலாக்கியுள்ளது.
இதை தடுக்க என்ன செய்யலாம் என்று படக்குழு டிசைன் டிசைனாக யோசித்தாலும் ஐடியா எதுவும் உருப்படியாக இல்லை... காரணம் தர்பார் படப்பிடிப்பு நடக்கும் இடம் ஒரு கல்லூரி பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிற இடம் என்பதால் அங்கே யார் எப்படி படங்களை எடுக்கிறார்கள் என்றெல்லாம் ஆள் போட்டு பார்க்க முடியாத நிலை. ஜிம் பாய்ஸ் எல்லாம் அங்கே எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் நிர்வாகத்திடம் சொல்லி மாணவர்களை கெடுபி...

